Thursday 7 February 2019

#நினைவலைகள் 


உன்னை எண்ணும் என் எண்ணங்களை நிறுத்த முடியவில்லை..

என்னை உண்ணும் உன் விழிகளை கான இயலவில்லை..

தொலைவில் நீ வெகு தூரம் சென்றதால் என் மனதில் மிக ஆழம் கொண்டாயோ ?

காலை குளியலறை தொடங்கி,
 இரவு போர்வையறையுள் அடங்கும் வரை,
 கடக்கும் ஒவ்வொரு நிமிடங்களிலும் 
60 வினாடிகள் உன்னை பற்றிய சிந்தனைகள் மட்டும்.  

இது போதும் அன்பே எனக்கு, 
நாள் முழுவதும் வீணாய் போன கணக்கு..!

இவையெல்லாம் குறைந்தளவு என்று, 
என் நித்திரையிலும் சித்திரவதை செய்யும் உன் நினைவலைகள் 
என் கனா-வின் வாசலில் நின்று காலிங் பெல் அடிக்கிறது..! 

                                                                                                      - பாரதி